2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வெள்ளி விழாவும் பட்டமளிப்பு விழாவும்

Niroshini   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை அந் நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் வெள்ளி விழாவும் வருடாந்த பட்டமளிப்பு விழாவும் ஆறாவது பரிசளிப்பு விழாவும் நேற்று திங்கட்கிழமை கல்லூரியின் தலைவர் எம்.எல்.ஹச்சி முஹம்மது தலைமையில் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலில் நடைபெற்றது.

அல் ஆலிம்கலாக எழுபத்திரெண்டு ஹாபிழ்களும் அல் ஹாபில்கலாக  ஐம்பத்திரெண்டு மாணவர்களும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கல்லூரியின் விரிவுரையாளர்களும் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவும் நிறுவனங்களின் தலைவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி அதிபர் ஷெய்குல் பலாஹ் அல் உஸ்தாத் மௌலானா, மௌலவி எம்.ஏ.அப்துல்லாஹ்,மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.நௌபல் றிஸ்வான் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X