2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்,ஆர்.ஜெயஸ்ரீராம்

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாத காலமாக நிலுவையிலுள்ள சம்பளத்தை உடன் வழங்குமாறு கோரி நேற்று திங்கட்கிழமை கடதாசி ஆலை முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாத சம்பளம் இரண்டு தடவைகளில் 70 வீதம் வழங்கப்பட்டதுடன் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாத சம்பளமும் 2014ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான சம்பள நிலுவை உட்பட நான்கு மாத முழுச் சம்பளமும் 30 வீத நிலுவையும் உள்ளது.

இந்நிலையில்,பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் ஆலைக்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்களுக்கு தொடர்ச்சியாக சம்பளம் நிலுவை இல்லாமல் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் அல்லது சுய விருப்பில் அல்லது கட்டாய சுயவிருப்பில் எங்களை அனுப்புவதற்குறிய நடவடிக்கைகளை புதிதாக வந்துள்ள அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தங்களுக்கான சம்பளம் கிடைக்கும் வரை தங்களது ஆர்ப்பாட்டம் தொடரும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதன்போது, சம்பவ இடத்துக்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி. ஸ்ரீநேசன் மற்றும் எச்.யாழேந்திரன் (அமல்) ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்க் கட்சித் தலைவர் ஊடாக இந்த கடதாசி ஆலையின் ஊழியர்களது பிரச்சினைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியேரின் கவனத்துக்கு கொண்டு வருவதாக உறுதியளித்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலையில் 33 கோடி ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ள நிலையில் கடந்த 09.02.2015 அன்று மட்டக்களப்பு தலைமை மின்சார சபை அதிகாரிகளால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் அன்று முதல் கடதாசி ஆலை இயங்காமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X