Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 17 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சலரோக தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் திருமதி. தர்சினி கருப்பபைய்யா மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுனர் டொக்டர் கே.கருணாகரன் மற்றும் வைத்திய விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் தாதியர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, நீரிழிவு நோய் தொடர்பாகவும் அதன் பக்க விளைவுகள் தொடர்பாகவும் விழிப்பூட்டும் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago