Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் விவசாய வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட மதகு மற்றும் தடுப்புசுவர் என்பன ஐ.ஓ.எம் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதானி முஜாஜிக் அமேலாவினால் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஐ.ஓ.எம் நிறுவனத்தின் நிதியதவி கொண்டு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் செலவில் இந்த விவசாய வீதி, மதகு மற்றும் தடுப்புசுவர் என்பன அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.
இத்திறப்பு விழாவில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் என். சிவலிங்கம், ஐ.ஓ.எம் நிறுவன மாவட்ட பொறுப்பதிகாரி எம். ஜெயராஜன், நிறுவன பொறியிலாளர் மொஹமட் பாஹீம், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
39 minute ago
3 hours ago