Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகளுக்கு எல்லை இடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் உத்தியோகஸ்;தர் ஜி.மக்கில், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
மாவட்டத்திலுள்ள வாவிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையை தடுக்கும் நோக்கிலும் வாவிகளின் கரையோரங்களை பேணும் நோக்கிலும் இபாட் நிறுவனத்தின் உதவியுடன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஆலோசனையுடனும் கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.கோகுலதீபனின் கண்காணிப்புடனும் வாவிகளுக்கு எல்லை இடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 09 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 128 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளிலும் வாவிகளுள்ளன. வாவியின் கரையில் 03 மீற்றர் உயரமான தூண்களை நிறுவி எல்லைகள் அடையாளம் இடப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி வாவிக்கு எல்லை இடும் நடவடிக்கை முடிவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
9 minute ago
12 minute ago
16 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
16 minute ago
22 minute ago