Thipaan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜெயந்தி விகாராதிபதியான நாவன அபயவன்சலங்கார தேரரின் உடல், ஸ்ரீ புத்த ஜெயந்தி விகாரையில் இன்று சனிக்கிழமை (17) மாலை அக்கினியுடன் சங்கமமாகியது.
சுகயீனம் காரணமாக கடந்த 14ஆம் திகதி இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி 15ஆம் திகதியன்று உயிரிழந்தார்.
இவரது மரணச் சடங்கில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, 23ஆவது இராணுவப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டி.டி.யூ.கே.ஹெட்டிஆராச்சி, பொலி;ஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago