2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஹர்த்தால் கைவிடப்பட்டது

Niroshini   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ரீ.எம்.பாரிஸ்

கிழக்கு முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்குடா பிரதேச அபிவிருத்தி குழுக்களின் ஒன்றியத்தினால் இன்று புதன்கிழமை ஓட்டமாவடியில் நடத்தப்படவிருந்த ஹர்த்தால் பொலிஸார் ,கிராமிய மற்றும் பொருளாதார பிரதியமைச்சர் ஆகியோரின் தலையீட்டினையடுத்து கைவிடப்பட்டது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம்,மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோய விஞ்ஞான ஆய்வு கூடங்களை நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலப்தீன் ஹாபீஸ் நஸீர் திறக்கவிருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்குடா பிரதேச அபிவிருத்தி குழுக்களின் ஒன்றியத்தினால் ஹர்த்தால் நடத்தப்படவிருந்தது.

இது தொடர்பில் ஒன்றியத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து ஹர்த்தால் கைவிடப்பட்டு இன்று புதன்கிழமை மேற்படி இரு பாடசாலைகளிலும் நிர்மாணிக்கப்பட்ட ஆய்வு கூடங்களை பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் திறந்து வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X