2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்ன் கடத்தி மூவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 நவம்பர் 12 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பொறுமதியாக ஹெரோய்ன் போதைப்பொருளைக் கடத்திய மூவரை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.

பொழும்பு—கிராண்ட்பாஸ் பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மூலம்  ஹெரோய்ன் போதைப்பொருளைக் கடத்திய இம்மூவரும், நேற்று (11)  கைதுசெய்யப்பட்டனரென, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

தகவலொன்றையடுத்து, குறித்த பஸ்ஸை சோதனையிட்ட பொலிஸார், பஸ்ஸுக்குள் இருந்து போதைப்பொருளைக் கைப்பற்றியதுடன், சந்தேகநபர்கள் மூவரையும் கைதுசெய்து, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X