Niroshini / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தி வரும் நிலையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமை(12) மாலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் சட்டவிதிகளுக்கு அமைவாக சட்டத்தினை மதித்து அதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கட்டுப்பட்டு செல்வதுடன் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
நிலைமைகளை அவதானித்தன் பின்னர் எதிர்வரும் வியாழக்கிழமை (15) கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை கூட்டவுள்ளோம் என்றார்.
மேலும்,குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனை எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் பார்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
8 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago