2025 மே 07, புதன்கிழமை

'அநீதி பற்றித் தெரிந்துகொள்வதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 06 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

நடந்த அநீதி பற்றித் தெரிந்துகொள்வதற்கான உரிமை பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் உண்டுவென நிலைமாற்று நீதிக்கான சர்வதேச நிலையத்தின் எடுவார்டோ கொன்ஸாலெஸ் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் ஏற்று அங்கிகரித்த ஜெனீவாத் தீர்மானங்களை அமுலாக்குவதற்காக நாட்டிலுள்ள சிவில் சமூகங்களுக்கு அறிவூட்டும் ஒரு நாள் செயலமர்வு, இன்று  வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு றீ ரூ ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பொறுப்புக் கூறவேண்டிய கடமை உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்குள்ள உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பொறிமுறை அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்ல அதற்கப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் விடயமும் இதில் தங்கியுள்ளது அது பற்றி நாம் மகிழ்ச்சியடையலாம்.

சர்வதேச சட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை, நீதி, பரிகாரம் ஆகிய மூன்று உரிமைகள் உண்டென்பதை அங்கிகரித்துள்ளது. அதனடிப்படையிலேயே இந்தப் பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது. தமக்கு நடந்த அநீதி பற்றித் தெரிந்து கொள்வதற்கான உரிமை பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் உண்டு. உண்மையைக் கண்டறிதல் என்பது ஒவ்வொரு சமூகத்துக்கும் உள்ள உரிமை. அத்துடன் பாதிக்கப்பட்டவர் பாதிக்கப்பட முன்னர் வாழ்ந்த நிலைமையில் தன்னைப் புனரமைத்துக் கொள்வதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றார்.

ஆயுத முரண்பாடுகள் இடம்பெறுகின்ற இடங்களில் ஆயிரக்கணக்கான மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றிருக்கும். ஆகையினால் அவ்வாறானதொரு பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரணை செய்து பரிகாரம் காண்பதற்கு பொருத்தமானதொரு பொறிமுறை தேவை' என்றார்.

பிரதான வளவாளருடன் இணைந்ததாக இன ஆய்வுக்கான சர்வதேச மையத்தின்; வளவாளராக பி.கௌதமனும் பங்கேற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X