Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தைப் பற்றி நாட்டில் பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்களும் விமர்சனங்களும் காணப்படுகின்றன. இருப்பினும், இந்த அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆதரவை வைத்துக்கொண்டு பிரிக்கப்படாத நாட்டுக்குள் ஒரே கொடியின் கீழ் அனைத்து இன மக்களும் சமவாய்ப்புடன் வாழும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கான தீர்வைக்; காண்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கம் என பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதியமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அமைப்பாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை அடுத்து, வந்தாறுமூலைப் பிரதேசத்தில் பொதுமக்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களை அவர் வழங்கிவைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்த நாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக எக்காலத்திலும் உழைத்த கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியே என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்' என்றார்.
'மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன என்பதை நான் அறிவேன். இதற்காக முறையான திட்டங்களைச் செய்யவேண்டும். அந்த வகையில், இங்குள்ள பிரச்சினைகளை உரிய அமைச்சுகளின் கவனத்துக்குக் கொண்டுசென்று தீர்வைப் பெற்றுத்தர முயற்சி செய்வேன். நல்லாட்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே முக்கியமான அமைச்சுப்பதவிகளில் உள்ளதை அறிவீர்கள்.
மேலும், இம்மாவட்டத்தை பயிர்ச்செய்கை ஊக்குவிப்புத்திட்டங்களின் மூலம் மேம்படுத்த முடியும் என்பது எனது கருத்தாகும். அதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்' எனவும் அவர் கூறினார்.


2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago