Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,பேரின்பராஜா சபேஷ், கே.எல்.ரி.யுதாஜித்
ஜெனீவாவினுடைய அடுத்த அமர்வுக்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இலங்கையின் தலைவிதி தங்கியுள்ளது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முன்பள்ளி ஆசிரியர்களின் வினைத்திறன் கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உலகத்தில் மிகவும் சிறந்த பணியாக ஆசிரியர் பணியை நான் கருதுகின்றேன்.அதில் பெரும் ஆத்மதிருப்தியை எங்குசென்றாலும் அடையமுடியாது.பிஞ்சு குழந்தைகள் இன்று கைகளில் விடப்படுகின்றன.அவர்களை விருத்திசெய்வதற்கு உங்களை விருத்திசெய்யமுடியாத கவலையுடன் மாகாணசபையில் இருக்கின்றோம்.
வடமாகாணத்தில் முன்பள்ளிகளை இராணுவத்தினர் நடாத்துகின்றனர்.கிழக்கு மாகாணத்தில் அந்த துர்ப்பாக்கியம் எமது குழந்தைகளுக்கு இல்லை.அந்தவகையில் கிழக்கு மாகாணம் பாக்கியம் செய்த மாகாணமாகும். இந்த நாட்டின் நீதி தொடர்பில் இன்னுமொரு கேள்விக்குறியை போடவேண்டியவர்களாக நாங்கள் உள்ளோம். மயிலந்தனையில் குமாரபுரத்தில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டு நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்கள் குற்றமற்றவர்கள் என்ற ரீதியில் அவர்கள் விடுதலைசெய்யப்பட்டனர். அண்மையில் நடைபெற்ற குமாரபுரம் வழக்கிலும் இதுதான் நடைபெற்றது.
சாட்சியங்கள் எல்லாம் குற்றஞ்சாட்டப்பர்கள்தான் செய்தார்கள் என்று சொன்னார்கள்.வெட்டினார்கள்.கொத்தி குதறினார்கள், சுட்டார்கள். இவ்வளவு அநியாயம் செய்தவர்களையும் அடையாள அணிவகுப்பில் எந்தவித சந்தேகமும் இன்றி அடையாளம் காட்டியும் கூட அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது நீதித்துறை தொடர்பில் பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவியல் வழக்குகள் இரண்முறையில் நடைபெறுகின்றது. யூரி சபையோடு அல்லது யூரி சபையின்றி. யூரி சபையோடு வழக்குகள் நடைபெறும்போது குற்றச்சாட்டப்பட்டவர்கள் தாங்கள் எந்த மொழி பேசுகின்ற யூரிகளை விரும்புகின்றார்கள் என்று சொல்வதற்கு உரிமையுள்ளது.
மாமனிதர் ரவிராஜின் வழக்கும் இதேநிலைமையிலேயே உள்ளது.இந்த மூன்று வழக்குகளும் யூரி சபையின் முன்பாக நடைபெற்றது. இந்த மூன்று வழக்குகளிலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டுள்ளன.ஆகவே இந்த நாட்டின் நீதித்துறை தொடர்பில் நியாயமான ஒரு குரலை எழுப்புகின்றோம்.
சிங்களம் பேசுகின்ற யூரர் சபை அமைக்கப்பட்டதுதான் இவர்கள் விடுதலைக்கு காரணம் என்று நாங்கள் கருதுகின்றோம்.எந்தவிதமான விசாரணைகளும் இல்லாமல் தீர்ப்பு வழங்கப்படும் சூழ்நிலையுள்ளது.
தேசம் சார்ந்த இனம்சார்ந்த வழக்குகள் வரும்போது அவை விசேட நீதிமன்றம் மூலம் நடத்தப்படும்போது மட்டுமே நீதியை எதிர்பார்க்கமுடியும் என நினைக்கின்றோம்.எதிர்காலத்தில் நீதித்துறை தொடர்பில் உரியவர்களிடம் கொண்டுசெல்வோம்.இது தொடர்பில் யாரும் குழம்ப தேவையில்லை.
உணர்ச்சிவசப்பட்டு கதைக்கவேண்டிய அவசியம் இல்லை.நாங்கள் மிகவும் அவதானமாகவே செயற்படுவோம்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் அரசியலமைப்பு சாசனம் தொடர்பாக ஐந்து உப குழுக்களின் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த பல்வேறு விடயங்கள் அந்த ஐந்து அறிக்கைகளில் வழங்கப்பட்டுள்ளது.அடுத்தகட்ட நகர்வின்போது இது குறைவுபடாத வகையில் செழுமைப்படுத்தவேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளது.செல்லுகின்ற பாதையில் எங்களுக்கு வெற்றிஏற்படவேண்டும்.
ஜெனிவாவினுடைய அடுத்த அமர்வுக்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இலங்கையின் தலைவிதி தங்கியுள்ளது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது' என்றார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago