Suganthini Ratnam / 2017 ஜனவரி 02 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
முஸ்லிம்கள் ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா தெரிவித்தார்.
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு நடத்திய 'சமூகத்தை நோக்கிய பயணம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்வு, காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'இலங்கையில் முஸ்லிம்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள போதிலும், முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் போதிலும் கூட இலங்கை முஸ்லிம்கள் ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை.
ஆயுதம் தூக்க வேண்டும் என்று எண்ணவும் இல்லை. பிரார்த்தனையை தங்களின் ஆயுதமாகக் கொண்டு இலங்கை முஸ்லிம்கள் வாழ்கின்றனர்' என்றார்.
'மட்டக்களப்பு, பங்குடாவெளிக் கிராமத்தில் நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் பெரியார் ஒருவரின் அடக்கஸ்தளம் அமைந்துள்ள காணி, தொல்பொருள் பிரதேசம் எனக் கூறி அக்காணியை சுவீகரிக்க முற்பட்டுள்ளனர். இது எமக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் சமூகம் பொறுமையாக வாழ்கின்றது. சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்தி, முஸ்லிம்கள் தமது நடவடிக்கையைச் செய்து வருகின்றனர்.
மேலும், தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தால் மாத்திரம் போதாது. இலங்கையில் முஸ்லிம்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டும். அப்போதே ஜனாதிபதிக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்றார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago