2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'இந்த நாடு மதவாதம்; காரணமாக தோல்வியடைகிறது'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

யுத்தத்தை வெற்றி கொண்ட இந்த நாடு, மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்குப் பதிலாக மதவாதத்தின் காரணமாக தோல்வி அடைகின்றது என நல்லிணக்கம் மற்றும் சமூகவலுவூட்டலுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் இறுதி அமர்வு, பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாட்டுப் பற்றுடன் நாம் இந்த யோசனைகளை முன்வைக்கின்றோம்.

இலங்கையில் கடந்த காலத்தில் இப்படியான பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன, அந்த ஆணைக்குழுக்களும் மக்களின் கருத்துகளைப் பெற்றது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்ற கருத்தை நாங்களும் முன்வைத்தோம். ஆயினும், பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டதாக இல்லை.
சகல மக்களும் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்காக நீதி, நிவாரணம் கிடைக்கும்; என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், துரதிஷ்டம் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறவில்லை' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X