2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'இரட்டைத்தன்மை காணப்படுவதால் சர்வதேச நீதிப் பொறிமுறையை தமிழர்கள் நாடுகின்றனர்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
இரட்டைத்தன்மையான நியாயங்கள் இந்த நாட்டில் காணப்படுவதன் காரணமாகவே தமிழ் மக்கள் சர்வதேச நீதிப் பொறிமுறையை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
 
பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின்  போராட்டங்களையும் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் நீதியான, நியாயமான தலைவர்களாக இருக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
      
படுவான்கரைப் பிரதேச மக்களுடனான சந்திப்பு அவரது அலுவலகத்தில் இன்று (9) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,'யுத்த காலத்தின்போது யுத்தக் குற்றங்களை  விளைவித்தவர்களாகக் கூறப்படுகின்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.  பாதிக்கப்பட்ட மக்களின் வலிகள், வடுக்களை குற்றவாளிகளைப் பாதுகாக்க நினைக்கின்றவர்கள் உணர மறுக்கின்றார்கள்.
குற்றவாளிகள் பாதுகாக்கப்படும்வரை இந்த நாட்டில் எந்தப் பொறிமுறைகளையும்; பாதிக்கப்பட்டவர்கள் நம்ப மாட்டார்கள்.

படையினர் குற்றம் இழைத்தாலும், கண்டுகொள்ளாத பாராபட்சமான நிலைப்பாடு காணப்படுகின்றது. இதனாலேயே, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உள்நாட்டுப் பொறிமுறை மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதுடன், அவர்கள் சர்வதேச நீதிப் பொறிமுறை மீது நம்பிக்கை வைத்துள்ளனர்' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .