2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'இரண்டு விடயங்கள் நடந்தேறியுள்ளன'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல்

இந்த நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமாயின்,  இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டும் ஒன்றுசேர வேண்டும்; என்பதுடன், எமது பிரச்சினைகளை அனுதாபத்துடன் நோக்கக்கூடிய சர்வதேச நிலைமை உருவாகவேண்டும். இவற்றையெல்லாம் செயற்படுத்தக்கூடிய வகையில் தமிழ் மக்கள் ஒன்றுபடவேண்டும். இந்த மிக முக்கியமான விடயங்களில் இரண்டு விடயங்கள் நடந்தேறியுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும்; தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள் ஒன்றுசேர்ந்ததன் காரணமாக இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நல்லாட்சி அமைவதில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. இறுதிநேரத்தில் பலர் வந்து சேர்ந்தபோதிலும், தெற்குத் தலைவர்களுடன் உழைத்தவர்கள் எமது தலைவர்கள் ஆவர்  எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு, பட்டிருப்புக் கிராமத்தில் 9 மில்லியன் ரூபாய்  செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் நன்னடத்தைக் காரியாலயத் திறப்பு விழாவில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'பல சந்தர்ப்பங்களில் நாங்கள் முடிவுகளைப் பெறுவதற்கு நெருங்கியபோதெல்லாம், அந்த இடங்களில் மிகவும் அவதானமாக கையாளத காரணத்தால், நாங்கள் தொடர்ந்து போர்ச்சூழலுக்கும்; உரிமை மறுப்புகளுக்கும் ஆளாக நேரிட்டது' என்றார்.   

'தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் புதிய அரசியலமைப்பு ஆக்கப்பட வேண்டும். உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எல்லோரும் கூறினாலும், அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அரசியலமைப்பில் அது ஆக்கப்பட வேண்டும்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமைத்துவமும் தமிழர்களை காட்டிக்கொடுக்க நினைக்கின்றது எனக்கூறி சிலர் மக்களை திசைதிருப்பப் பார்க்கின்றனர்.

மேலும், எமது முஸ்லிம் சகோதரர்களுடன் நாங்கள் பேசவேண்டும். எடுத்த எடுப்பிலேயே வடக்கு, கிழக்கு இணைப்பு வேண்டாம் என்று கூறுகின்றார்கள். எதற்கு வேண்டாம் என்று அவர்கள் யோசிக்கவேண்டும். அதில் நாங்கள் கலந்துகொண்டு கருத்துகளை பரிமாறவேண்டும். நெருக்கடிகள் மற்றும் ஒன்றுபடாத கருத்துகளை செம்மைப்படுத்தி நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அரசியலமைப்பை உருவாக்கவேண்டும்' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X