Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
2018ஆம் ஆண்டில் நாடு முழுமையான முன்னேற்றத்தைக் காணும் என புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, புதூர் ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் ஒரு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியிதியில் பஞ்சதள இராஜகோபுரம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை இதற்கான அடிக்கல்லை அமைச்சர் நாட்டிவைத்து உரையாற்றியபோதே, மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'முன்னைய அரசாங்கம் விட்ட பிழைகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டியுள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் பணத்தையெல்லாம் காலி செய்து விட்டார்கள். அதனால் பணத்தை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதற்காகவே வற் வரியை ஏற்படுத்தியுள்ளோம்' என்றார்.

2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago