2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'இளைஞர்கள் கணக்கிலெடுக்கப்படவில்லை'

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த அரசாங்கத்தில் இளைஞர்கள் கணக்கிலெடுக்கப்படவில்லை. இந்த அரசாங்கம் எமக்கு கனவு காண்பிப்பதற்கான அல்ல.மாறாக எமது கனவுகளை நனவாக்குவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது என கல்குடா தொகுதி இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இளைஞர்களது உரிமையை இளைஞர்களாகிய நாம் முழுமையாக பாதுகாக்க வேண்டும்.

வெறும் வாய் வார்த்தைகளாக கொக்கரித்து கொண்டு இளைஞர்களாகிய எம்மால் இருக்க முடியாது. கனவுகளை காண்பித்து பல கோடிக்கணக்கில் கடந்த அரசாங்கம் நிகழ்வுகளை எமக்கு ஏற்பாடு செய்து விட்டு வெறும் 350-450 ரூபாய் பெறுமதியான ஆடைகளை தந்து எம்மை கொழும்புக்கு வரவழைத்து சர்வதேசத்துக்கு படம் காட்டி எம்மை வழி அனுப்பி வைத்த வரலாறு கடந்த அரசாங்க காலத்தில் நான் கண்டுகொண்ட உண்மையாகும்.

யுத்ததினாலும் இயற்கை அனர்தங்களினாலும் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் ஏழை இளைஞர்கள் வாழும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

இச் சந்தர்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் இளைஞர்களின் கனவினை நனவாக்கும் கொள்கைகளையும் திட்டங்களையும் எமக்காக வகுத்து யாரும் எண்ணிப்பார்த்திடாத வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழிகாட்டுதலின் கீழ் இவ் இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது என்றார்.

மேலும்,கடந்த அரசாங்கம் எமது உரிமைகளை பறித்தது. மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஜனநாயக அரசாக அது காணப்படவில்லை. தாரான்மை வாதம் என்ற எந்த கொள்கையினையும் அது கொண்டிருக்கவில்லை.

ஆனால், இம்முறை நம்பிக்கையோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்,முஸ்லிம்,சிங்கள இளைஞர்களின் நம்பிக்கையின் அப்படையில் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் போட்டியிடுகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X