Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வடிவேல் சக்திவேல், எஸ்.பாக்கியநாதன்
'ஜீவனோபாயத் தொழிலாக மாடு மேய்க்கும் தொழில் செய்துவந்த எனது கணவர் 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி வெட்டிக் கொல்லப்பட்டமைக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை' எனப் பொத்துவில் பாணமைப் பிரதேசத்தைச் சேர்ந்த கே.தில்ருக்ஷி (வயது 42) தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுமத்தின் அமர்வு, மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் திங்கட்;கிழமை (05) நடைபெற்றபோது, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,'எனது கணவரைப் பயங்கரவாதிகள் பல துண்டுகளாக வெட்டிப் படுகொலை செய்ததை எண்ணி இன்றுவரை நானும் எனது பிள்ளைகளும் வருந்துகின்றோம். இது கொடுமையிலும் கொடுமை. எனக்கு 03 பிள்ளைகள் இருக்கின்றார்கள். நான் கணவர் இன்றியும் எனது பிள்ளைகள் தந்தை இன்றியும் அநாதரவாகியுள்ளோம்.
மரண அத்தாட்சிப் பத்திரத்தில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளே என் கணவரைக் கொன்றார்கள் என்பது எனக்கும் ஊர் மக்களுக்கும் நன்கு தெரியும்.
தற்பொழுது நான் ஆடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டு வருகின்றேன். கணவர் இறந்தமைக்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூhபாயை அரசாங்கம் தந்தது. எனக்கு ஏற்பட்ட பாதிப்பு இந்த நாட்டில் வாழும் எந்த சமூகத்தவருக்கும்
ஏற்படக்கூடாது' என்றார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025