2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'எனது குடும்பத்தில் 9 பேர் பலி எடுக்கப்பட்டனர்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'கடந்த யுத்தம் காரணமாக எனது குடும்பத்தில் மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள் உட்பட 09 பேரைப் பலி எடுத்து  இந்த உலகி;ல் நான்; தனிமைப்படுத்தப்பட்டுவிட்டேன்'  என ஏறாவூரில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட எம்.மீராசாஹிபு (வயது 78) தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்தறியும் அமர்வு, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.  

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'நானும் எனது குடும்பமும் முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படுகொலையை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்தனர் என்பதைத் நான் இன்றுவரை உணர்ந்திருப்பதாகவும் ஆனாலும், அவர்கள் முஸ்லிம்களைப் படுகொலை செய்ததற்கான சரியான காரணத்தை இன்னும் நான் அறிந்திருக்கவில்லை' என்றார்.
'தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வயோதிபத்தை அடைந்துள்ள தனக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும். என் குடும்பத்தினரைப் படுகொலை செய்தவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். அத்துடன், இது போன்ற கொடுஞ்செயல்கள் இனி இந்த நாட்டில் எவருக்கும் நடக்கவிடக் கூடாத வண்ணம் மனிதர்கள் என்ற அடிப்படையில் எல்லோரும் பாதுகாக்கப்பட வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X