Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
68 வருடங்களாக தமிழர்கள் நிராகரித்துவந்த ஒற்றையாட்சி முறைக்கு தமிழர்களின் ஆணையைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம், மட்டக்களப்பு நகரிலுள்ள கூட்டுறவு நிலைய ஒன்றுகூடல் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'10ஆம் திகதி உத்தேச வரவை வெளியிடவுள்ளார்கள். அதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குப் பின்னர், சிலவேளைகளில் பொதுசன வாக்கெடுப்புக்கு அதனைக் கொண்டுவரக்கூடும். அப்படி நடக்கும் சந்தர்ப்பத்தில் எங்களுடைய மக்கள் தங்களின் அறியாமை காரணமாக ஏமாற்றுச் சக்திகளின் கவர்ச்சிகரமான பிரசாரங்களை நம்பி ஒற்றையாட்சிக்கு வாக்களித்து விடுவார்கள்' என்றார்.
'சுதந்திரத்துக்குப் பின்னர் 68 வருடங்களாக தமிழர்கள் நிராகரித்துவந்த ஒற்றையாட்சி முறை இலங்கையில் நடைமுறையில் உள்ளது. அதேபோன்ற அரசியலமைப்பே மீண்டும் வரப்போகின்றது. ஆனால், என்ன வித்தியாசம் என்றால், 68 வருடங்களாக இல்லாத தமிழர்களின் ஆணை அதற்குப் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது. இது மிகப்பெரிய சதியாகும்.
வடகிழக்கு இணைப்பு இல்லாமல் ஒற்றையாட்சிக்குள் ஒரு நாடாளுமன்றத்தில் 30ஆம்; திகதியன்று நாங்கள் சமஷ்டியைக் கோரவில்லை என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதாவது, இறைமையைக் கோரவில்லை என்று சொல்லப்பட்டிருக்கின்றது. சமஷ்டியை கோரவில்லை என்பதே அதன் அர்த்தமாகும். இப்படிப்பட்ட சூழலில் அதன் அவசியத்தையும் அவசரத்தையும் நாங்கள் எல்லோரும் விளங்கிக்கொண்டு கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
புதிய அரசியல் யாப்பானது தமிழ்த் தேசத்தினுடைய இறைமை, சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்த அரசியல் யாப்பாக வரவேண்டும், இல்லையெனில், அதனை நாங்கள் ஏற்கமாட்டோம் என்பதை முழு உலகுக்கும் சொல்லக்கூடிய வகையில் இந்த எழுக தமிழானது கிழக்கு மக்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் செல்லப்பட வேண்டும். தீர்வுத் திட்டத்தின் பிரதியுடன் வீடுகளுக்கு நாங்கள் செல்லும்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
இதற்கு முதலில் எங்களுடைய இனத்துக்குள் ஒற்றுமை ஏற்படவேண்டும். நாங்கள் ஒற்றுமையாக ஓரணியில் நிற்கவேண்டும்' எனவும் அவர் கூறினார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago