Thipaan / 2017 மார்ச் 31 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.பாக்கியநாதன்
"இலங்கையின் சனத்தொகையில், 90 பேரில் ஒருவர் எனும் வீதத்தில் ஓட்டிசம் மாற்றுத்திறனாளிகள் காணப்படுகின்றனர். அவர்களும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்" என, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
உலக சுகாதார தினம் 2017ஐ முன்னிட்டு, கத்தோலிக்க திருச்சபையின் 'பிரதஸ்சரிட்டி' தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் தீரனியம் 'ஓட்டிசம்' சிறுவர் பாடசாலை எதிர்வரும் 8 ஆம் திகதி மட்டக்களப்பில் திறந்து வைக்கப்படுவதை முன்னிட்டு, துறைசார்ந்தோருக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று (31) நடைபெற்றது.
வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையின் உளநலப்பிரிவின் வைத்திய அதிகாரி யூ.டி.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் பழகிய எனது 15-20 வருட அனுபவத்தில் அவர்கள் மாற்றுத்தினாளிகளின் நலனில் அதிக அக்கரை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். தொழில் பயிற்சி, பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான மூக்குக் கண்ணாடிகள் வழங்கல், சிறிய வேலைவாய்ப்பு, அதன்பின் அவர்களுக்கான திருமணம் போன்ற மனிதாபிமான விடயங்களிலும் அவர்கள் அதிக கரிசினை காட்டுகின்றனர்.
அத்தோடு, பொருளாதார, சுற்றாடல் பற்றிய விழிப்புணர்வு, குடும்ப உறவினர்களிடம் அன்பு செலுத்துதல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம், மதுப்பாவனை, போதைப்பொருள் பாவனை என்பனவற்றை கட்டுப்படுத்துதல் போன்ற நிகழ்வுகளிலும் குறித்த நிறுவனங்களின் பங்களிப்பு மிகையானது.
உளச்சோர்வுக்கும் தற்கொலைக்கும் மிகுந்த தொடர்புண்டு 15-29 வயதினரிடையே ஏற்படும் மரணங்களில் தற்கொலையால் ஏற்படும் மரணங்கள் இரண்டாவது நிலையில் காணப்படுகின்றது" எனத் தெரிவித்தார்.
இதன்போது மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் துண்டுப்பிரசுரங்கள் நகர பிரதான பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .