Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெறுபவர்கள் வீட்டில் முடங்கியிருக்காமல், சமூக சேவையிலும் ஈடுபட வேண்டுமென காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகஸ்தராக கடமையாற்றி ஓய்வு பெறுகின்ற எஸ்.சுந்தரராஜனை கௌரவிக்கும் நிகழ்வு, பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஓய்வூதியர்கள் வீட்டில் முடங்கியிருக்காமல் சமூக சேவையில் ஈடுபட வேண்டும். அவர்;களின் அரசாங்க சேவை வாழ்க்கையை மற்றவர்களும் கற்றுக்கொள்ளும் வகையில் அவர்;களுக்கு வழிகாட்டிகளாக நடக்கவேண்டும்.
இந்த நிகழ்வில்; காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவராசா, கணக்காளர் கே.ரூபாகரன், மாவட்ட உதவிப்பதிவாளர் எம்.பைறூஸ் உட்பட காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .