2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கடத்தல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை (15) பல்கலைக்கழக மாணவியொருவர் வானில் கடத்திச்செல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வான் சாரதி உட்பட மூவரைக்; கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மாணவி கடத்தப்பட்டமை தொடர்பில் தம்மிடம் அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்தனர். இதனை அடுத்து, வெல்லாவெளிப் பிரதான வீதியில் கடமையி;ல் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் குறித்த வானை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டினர். இருப்பினும், அச்சமிக்ஞையை மீறி வான் தப்பிச்சென்றதாகவும் இதன் பின்னர், கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இவர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X