Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
கடந்த காலத்தில் திட்டமிடப்பட்டு தொழில் ரீதியிலும் கிராம அபிவிருத்தி வேலைகளிலும் தமிழ் மக்கள் புறந்தள்ளப்பட்டிருந்தனர். இது கவலைக்குரிய விடயம். இவ்வாறானதொரு நிலைமை எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வராமலிருக்க வேண்டும். இந்நிலையில், நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்
மண்டூர் பிரதேச மக்களுடனான சந்திப்பு, மண்டுகோட்டமுனைப் பகுதியில் திங்கட்கிழமை (28) மாலை நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபையினூடாக வழங்கப்பட்ட பல சிற்றூழியர் நியமனங்களில் தமிழ் இளைஞர், யுவதிகள் புறந்தள்ளப்பட்டிருந்தனர்' என்றார்.
'தற்போது வடமாகாணத்தில் முதலமைச்சராக இருக்கும் தமிழர் ஒருவரைப் போன்று கிழக்கு மாகாணத்திலும் நாங்கள் ஆட்சி அமைத்து எங்களின் உரிமையை ஜனநாயக வழியில் பெறவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
'அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வட, கிழக்கில் தமிழ் மக்களின் ஆணையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகளவான ஆசனங்களைப் பெற்று தற்போது எதிர்க்கட்சியாக இருப்பது தமிழர்களின் உரிமையைப் பெறுவதற்கான வழியை விரைவில் ஏற்படுத்துமென்று நான் நினைக்கின்றேன்.
தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக தமிழ்த் தலைவர்கள் அகிம்சை வழியில் செயற்பட்டதுடன், பின்னர் முப்பது வருடகால யுத்தமும் இடம்பெற்றது. இதனால், நாம் பலவற்றை இழந்துள்ளோம்' எனவும் அவர் தெரிவித்தார்.
22 minute ago
36 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
36 minute ago
4 hours ago
4 hours ago