2021 மே 11, செவ்வாய்க்கிழமை

கல்வி மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கு கௌரவமளிப்பு

Niroshini   / 2016 மார்ச் 31 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 25 வருட கால சேவையைப் பூர்த்தி செய்த கல்வி மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு, புதன்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபனப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி ரீ. ஜயசிங்கம் அப்பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த நிருவாக முன்னாள் அதிகாரி உமா குமாரசுவாமி ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 30 வருட காலம் சேவையாற்றிய கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் 48 பேரும் 25 வருட காலம் சேவையாற்றிய கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் 43 பேரும் பாராட்டி கௌரவிக்கப்ட்டதோடு, அவர்களுக்கு சேவைச் சிறப்பு சான்றிதழ்களும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த நிருவாக முன்னாள் அதிகாரி உமா குமாரசுவாமியால் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X