Thipaan / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் புன்னைக்குடா, சவுக்கடி மற்றும் சின்னச்சவுக்கடி ஆகிய மீன்பிடிப் பிரதேசங்களைச் சேர்ந்த கடலில் தினமும் ஆழ்கடல் மற்றும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும்
(11, 12) கடலுக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
இந்தக் கடற்கரையோரங்களில் வழமைக்கு மாறாகக் காணப்படும் கொந்தளிப்பும் கடற் பெருக்குமே இதற்குக் காரணமென்று தெரிவித்த மீனவர்கள், சனிக்கிழமை இரவிலிருந்து கடல் வழமைக்கு மாற்றமாக சீற்றத்துடன் காணப்பட்டதாகவும்; இதனால் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு, ஞாயிற்றுக்கிழமை மிக அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
சவுக்கடி மற்றும் சின்னச்சவுக்கடி கடலோரங்களில் சுமார் 8 அடி உயரத்துக்கு கடலலைகள் உயர்ந்து ஆர்ப்பரித்ததாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
புன்னைக்குடா கடலில் ஒரு மீன்பிடிப் படகு ஆர்ப்பரித்தெழுந்த கடலலையினால் உடைந்து நொருங்கியுள்ளது.
தமது மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்புக்கருதி அவற்றைக் கடற்கரைகளிலிருந்து நகர்த்தி ஊர்ப்புறத்துக்குள் நிறுத்தி வைத்துள்ளதோடு, படகு இயந்திரங்களையும் அகற்றிச் சென்று பத்திரமாக வைத்துள்ளதாகவும் தெரிவித்த மீனவர்கள், கடல் நிலைமை வழமைக்குத் திரும்பியவுடனே இனி தாங்கள் மீன்பிடியில் ஈடுபடலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago