2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

காங்கேயனோடையில் கடத்தப்பட்ட இளைஞன் மீட்பு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி, காங்கேயனோடைப் பிரதேசத்தில் கடத்தப்பட்ட இளைஞர் ஒருவர் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், ஈரான்சிட்டிக் கிராமத்திலுள்ள வயல்வெளியிலிருந்து இன்று (11) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேயனோடையைச் சேர்ந்த கலீல் மஸ்பி (வயது 28)  என்ற இளைஞரே  திங்கட்கிழமை (10) மாலை இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட இந்த இளைஞர்; தொடர்பில் அவரது சகோதரருக்கு தகவல் கிடைத்த நிலையில், குறித்த இடத்துக்கு சகோதரரும் நண்பர்களும் சென்று மேற்படி இளைஞரை மீட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்;.

இந்த இளைஞர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர் காயமடைந்து காணப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.  

இந்த இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அவரது சகோதரர் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான விசாரiணையைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .