Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 08 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
அரசியல் கைதிகளின் விடுதலையானது தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டுப்படுத்தியதாக அமைய வேண்டும்.மாறாக,தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை காரணமாக வைத்து ஏனைய குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் வைரமுத்து நல்லதம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தைப்போன்று புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அலட்சியப்போக்கை கடைபிடிக்கக் கூடாது.
சர்வதேச நீதிபதிகள் சட்ட வல்லுனர்களைக் கொண்டு இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாமை தொடர்பாக விசாரணை நடைபெற வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. ஆனால் சிங்கள கடும்போக்கு சக்திகள் இந்த நாட்டுக்குள் சர்வதேச நீதிபதிகள் சட்ட வல்லுனர்கள் தலையீடு வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றன.
எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம் என பேரினவாத சக்கதிகள் கோஷமிட்டுக் கொண்டிருக்கின்றன. இவர்களுடைய வாக்குறுதிகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. கடந்த கால ஆட்சியாளர்களுக்கும் தமிழ் தலைவர்களுக்குமிடையே பல ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்ட போதிலும் அவை நிறைவேற்றப்படாமல் நிராகரிக்கப்பட்டமை கடந்தகால வரலாறு.
தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும். தமிழ் மக்களுக்கு தீர்வுத்திட்டமொன்றை வழங்குவதற்கு முன்பு புரிந்துணர்வு நல்லிணக்க அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
இந்த விடுதலையானது தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டுப்படுத்தியதாக அமைய வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை காரணமாக வைத்து ஏனைய குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள கூடாது. மக்கள் விடுதலை முன்னணியினர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படும் போது, சிறைகளில் பல தமிழர்கள் தடுத்துத்துவைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
மேலும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,கைதிகளின் விடுதலையோடு நின்றுவிடாது. இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் உரிய இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களின் நிலங்களை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் போன்ற விடயங்கள் தொடர்பாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago