Princiya Dixci / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
“மனித மனங்களில் தற்போது குரோதங்கள் அதிகரித்துள்ளதால் வெறும் அழிவுகளே எஞ்சி நிற்கின்றன” என களுவாஞ்சிகுடி பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி என்.ரீ. அபூபக்கர் தெரிவித்தார்.
சுனாமித் தாக்கத்தால் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு நிகழ்வு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் கிராமத்தில் திங்களன்று இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அபூபக்கர், “கடந்த சுனாமியின்போது பலத்த அழிவுகளை நாம் சந்தித்தோம். இவ்வாறான அழிவுகளை நாம் ஈடு செய்ய முடியாது.
அதுபோன்று மனித மனங்களிலுள்ள குரோதங்களின் விளைவுகளாக அழிவுகள்தான் வரும், மனங்களில் குரோதங்கள் எற்படும்போது சுனாமி அழிவை நினைத்துப் பாருங்கள். அப்போது குரோத மனப்பாங்கு நீங்கிவிடும். எனவே, மக்கள் தீய காரியங்களை சிந்திப்பதையும், செயற்படுவதையும் தவிர்த்துக் கொண்டு நல்லதையே சிந்தித்து நல்லபடி செயற்பட்டு வாழ்ந்து மறைய வேண்டும்.
அப்போதுதான் நாம் மறைந்த போதும் நமது பெயர் அடுத்து வரும் சந்ததிகளால் நல்லபடி உச்சரிக்கப்படும்.
இல்லையேல் அநியாயங்களுக்குத் தலைவிரித்தாடிய நபர்களின் அசிங்கமான பட்டியலில் நமது பெயர்கள் இடம்பெற்று விடும். அது நமது சந்ததியையே அவமானச் சின்னமாக உருவாக்கி விடும்.
மரணத்தைப் பற்றி சிந்திக்கும் ஒரு நல்ல மனிதன் மற்றவர்களுக்கு அநியாயம் செய்ய ஒரு போதும் முயற்சிக்க மாட்டான்.
இறைவன் மனிதனுக்காக எத்தனையோ அருட்கொடைகளை அருளாக வழங்கியிருக்கின்றான். ஆனால், மனிதன் அவற்றை துஷ்பிரயோகம் செய்து தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொண்டுள்ளான்” என்றார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago