Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
போதிய பௌதீக வளங்களுடன் காணப்படும் நகரப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பெறும் பெறுபேறுகளை விட, பௌதீக வளங்கள் குறைந்த கிராமப்புற பாடசாலை மாணவர்களின் பெறுபேறுகள் அதிகமாக உள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு, ; அதன் அதிபர் ஜே.பி.ஆர்;. தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஆசிரியர்கள் நகரப் பாடசாலைகளில் தான் கடமையாற்ற வேண்டும் என்ற கொள்கையை விட்டு, வசதிகளற்ற இடங்களில் உள்ள பிள்ளைகளுக்கான கல்வியை ஊட்டி அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும். அப்போது தான் ஆசிரியப் பணியின் முக்கியத்துவம் வெளிப்படும்' என்றார்.
கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரத்தினம், கோ.கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago