2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கூரையிலிருந்து விழுந்து ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, கல்குடாப் பிரதேசத்திலுள்ள தனியார் சுற்றுலா விடுதியொன்றில் கூரை வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் தவறிக் கீழே விழுந்ததில், சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற இச்சம்பவத்தின்போது, வாழைச்சேனையைச் சேர்ந்த ந.நவசுமன் (வயது 26) என்பவரின் தலையின் பின்பகுதியில் காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தச்சு வேலை செய்யும் சக தொழிலாளர்களுடன் சேர்ந்து கூரை வேலை செய்துகொண்டிருந்தபோதே, இச்சம்பவம் இடம்பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X