Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் 3 சுற்றுலா வலயங்களை உருவாக்கவுள்ளதாக மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
உலக சுற்றுலாத்தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனையொட்டி கிழக்கு மாகாண சுற்றுலாச் சபையும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு, மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (27) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'ஜனாதிபதியும் பிரதமரும் கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளனர். இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் பாரியளவில் அபிவிருத்திப் பணியை முன்னெடுப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்று அதற்கான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, இம்மாகாணத்தில் சுற்றுலா வலயங்களை உருவாக்குவது தொடர்பில் பிரதமர் கூடிய கவனம் செலுத்தி வருகின்றார். 3 சுற்றுலா வலயங்களை அமைப்பது தொடர்பில் ஆராயப்படுகின்றன' என்றார்.
'மேலும், இம்மாகாணத்துக்கு சுற்றுலாத்துறை சார்ந்த முதலீட்டாளர்களை வரவேற்பதற்காக இங்குள்ள குறைபாடுகளை ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாகாண சபையில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாச் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தற்போது இம்மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு கனடா முன்வந்துள்ளது. அந்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள 3 நிபுணர்கள் அது தொடர்பான பணியை மாகாண சபையிலிருந்து முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் கிழக்கு மாகாணத்துக்கான சுற்றுலாத்துறைத் திட்டம் தயாரிக்கப்படும்.
சுற்றுலாத்துறைக்கான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இம்மாகாணத்துக்கு வருகை தரும் முதலீட்டாளர்கள், ஓர் ஒழுங்கமைக்குள் உள்வாங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு திட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அதனை ஒழுங்கமைக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாச் சபை ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.
சுற்றுலாத்துறையில் பல பிரிவுகள் உள்ளன. அனைத்துத் துறைகளையும் வினைத்திறனாக மாற்றி, அதன் மூலம் சிறந்த சுற்றுலாத் துறையை கிழக்கு மாகாணத்தில் கட்டியெழுப்ப வேண்டிய வகையில் சுற்றுலா அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன' எனவும் அவர் கூறினார்.

46 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago