Suganthini Ratnam / 2017 ஜனவரி 09 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, சந்திவெளி பாலயடித்தோனா நாகதம்பிரான் கோவிலின் மடப்பள்ளி இனந்தெரியாதோரால் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு உடைக்கப்பட்டுள்ளதுடன், உண்டியலும்;; திருட்டுப் போயுள்ளதாக தம்மிடம் அக்கோவில் நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (09) காலை கோவிலுக்குச் சென்ற மேற்படி நிர்வாகத்தினர், மடப்பள்ளி உடைக்கப்பட்டதையும் அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்களும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும் திருட்டுப் போயுள்ளமையை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் தமக்கு முறைப்பாடு செய்துள்ள நிலையில், விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago