Niroshini / 2015 நவம்பர் 02 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
யுத்தத்தில் ஈடுபடாத யுத்தக் கைதிகள் என அழைக்கப்படும் அரசியல் கைதிகளை நல்லாட்சியில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமான ஞா. ஸ்ரீநேசனை வரவேற்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேருமாக 9 அரசியல் கைதிகள் உள்ளனர்.
சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் எமது கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தன் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.
சர்வதேச அழுத்தத்தின் மத்தியில் நடைமுறைச் சாத்தியமும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான வடக்கு,கிழக்கு இணைந்த ஒரு தீர்வில் எமது தலைவர் உறுதியாக உள்ளார்.
நாம் உணர்ச்சி வசனங்களை கொட்டும்போது பெரும்பான்மை இனவாதம் மீண்டும் மேலாதிக்கம் பெற காரணமாக அமையும். அதற்காக அவற்றைத் தவிர்த்துள்ளோம்.
இனப்படுகொலையை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்கின்றது. ஆனால், அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. யுத்தக் குற்றங்கள் இனப்படுகொலையை நோக்கிச் சென்றுள்ளது என்பதில் அரசாங்கத்துக்கு உடன்பாடு உள்ளது என்றார்.


1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025