2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'சுமையை சுமப்பதற்கு அனைவரும் முன் வரவேண்டும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஒரு குடும்பத்தின் பொருளாதார சுமையை சுமப்பதற்கு அனைவரும் முன் வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

முத்தான வியர்வை எனும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திட்டப்பயணாளிகளின் உற்பத்தி பொருட்களின் சந்தையை நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு, நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில்  தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஒரு குடும்பத்தின் பொருளாதார சுமையை ஒருவர் மட்டும் சுமப்பது இந்த நாட்டில் காணப்படுகின்ற ஒரு சாபக்கேடாகும்.

அந்தக் குடும்பத்தின் தலைவனோ அல்லது தலைவியோ தனது துணைவரை இழந்து விட்டால் அவர் மட்டும் ஏனையவர்களுக்காக தங்கியிருப்பவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு செயற்பாட்டை நாம் காண்கின்றோம்.

அந்தக் குடும்பத்தின் தலைவனோ அல்லது தலைவியோ குடும்பத்தை தாங்கி நிற்கும் ஒருவர் தனியாக படுகின்ற உடல்,உள கஷ்டங்களும் பெருளாதார கஷ்டங்களும் குடும்பத்திலிருக்கின்ற ஏனைய உறுப்பினர்கள் புரிந்து கொள்வதில்லை.

எனவே,ஒரு குடும்பத்தின் சுமையை சுமப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X