Gavitha / 2016 நவம்பர் 21 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, சகல உள்ளூராட்சி மன்றங்களும், 24 மணிநேர ஊழியர்களை தயார் படுத்தி வைத்திருக்குமாறு, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளார்.
முதலமைச்சரின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்ட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்படும் போது, அவை வழிந்தோடுவதற்கு ஏற்பாடுகளை செய்யவும் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கவும் தயாராக இருத்தல் வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுமக்களுக்கான சேவைகளை செய்யத்தவறுபவர்கள் பற்றி, முதலமைச்சருக்கு தகவல் வழங்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 minute ago
34 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
6 hours ago
21 Dec 2025