Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவச பாடசாலை சீருடைத் துணிக்கான வவுச்சர்களை இனிமேல் Wஏற்று (28.12.2016) தொடக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது என ஏறாவூரிலுள்ள அரசாங்க வங்கிகள் இரண்டின் அதிகாரிகள் தெரிவித்து விட்டதால் பிள்ளைகள், கல்வி அதிகாரிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டதாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் தெரிவித்தார்.
இது விடயமாக புதன்கிழமை தனக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலைமையை சீர் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சீருடைத் துணிகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ததாகவும் வலயக் கல்விப் கூறினார்.
பாடசாலைச் சீருடைத் துணிக்கான வவுச்சர்கள் டிசெம்பெர் 31 ஆம் திகவரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று அரசாங்கமும் கல்வி அமைச்சும் அந்த வவுச்சரில் அச்சிட்டுக் குறிப்பிட்டுள்ளபோது அதனை குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக எவரும் நிராகரிக்க முடியாது என்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் வலியுறுத்தினார்.
இது பற்றி பெற்றோரும் மாணவர்களும் கூறுகையில், தாங்கள் தமக்குரிய சீருடைத் துணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட துணிக்கடைகளுக்கு 28.12.2016 புதன்கிழமை சென்ற பொழுது பாடசாலைச் சீருடைத் துணிக்கான வவுச்சர்களுக்கு இன்றுடன் (28.12.2016) சீருடைத் துணிகள் வழங்க முடியாது என்றும் அதனைப் பொறுப்பேற்க வேண்டாம் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்ததாக துணிக்கடைக் காரர்கள் கூறிவிட்டனர்.
இதனையடுத்து உடனடியாக இது குறித்து மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளோம் என்றனர்.
இவ்விவகாரம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட துணிக்கடைக் காரர்களைக் கேட்டபோது தமக்கு குறிப்பிட்ட அரச வங்கிகளின் அதிகாரிகள் இனிமேல் (28.12.2016 ஆந் திகதியுடன்) இலவச சீருடைத் துணிக்கான வவுச்சர்களை பெற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர். தம்மிடம் இலவச சீருடைத் துணிக்காக வந்த வாடிக்கையாளர்களைத் திருப்பியனுப்பியதாகவும் கடைக்காரர்கள் கூறினர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago