Suganthini Ratnam / 2017 ஜனவரி 05 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மைச் சமூகங்களுக்குச் சொந்தமான 54க்கும் மேற்பட்ட இடங்கள் புராதன இடங்களாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், அவற்றுக்குப் பெரும்பான்;மைச் சமூகம் உரிமை கொண்டாடுவதானது, இங்குள்ள சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது என அம்மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்களுக்கு புகைப்படக் கருவிகளை வழங்கும் நிகழ்வு, கடாபி ஹோட்டலில் புதன்கிழமை (04) இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'வில்பத்தில் முஸ்லிம்களின் காணிகள் வன இலாகாவுக்குரிய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற செயற்பாடனானது, சிறுபான்மைச் சமூகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறே அக்கரைப்பற்று, பொத்தானைக் கிராமத்தில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த பள்ளிவாசல், அதனுடன் சூழவுள்ள பிரதேசங்கள் புராதன இடங்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதும் மட்டக்களப்பில் 26 இடங்கள் புராதன இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதும் கிழக்கு மாகாணத்தில் 54 க்கும் மேற்பட்ட இடங்கள் புராதன இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதுமானது அந்த இடங்களை நல்லாட்சி அரசாங்கம் அபகரிக்கும் நிலைமை இப்போது உருவாகியுள்ளது' என்றார்.
'மேலும், சிறுபான்மையின அரசியல் பிரதிநிதிகள் ஒற்றுமைப்பட்டு, அச்சமூகங்களுக்காக குரல் கொடுக்கும் நிலைமையை உருவாக்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் இடமளித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்படாமல் போன முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை, நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ளது என்ற விடயத்தை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கின்றது' என்றார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago