2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'சிறுபான்மையினச் சமூகங்கள் தனித்து நின்று எதனையும் சாதிக்க முடியாது'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 01 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
இந்த நாட்டில் இரு பெரும்பான்மையினக் கட்சிகள் இணைந்து ஆட்சி செய்யும் நிலையில், சிறுபான்மையினச் சமூகங்கள் தனித்து நின்று எதையும் சாதித்துவிட முடியாது எனக்  கிராமிய பொருளாதாரப்; பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
 
வாகரைப் பிரதேச பண்ணையார்களின் பிள்ளைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை (31) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,
'நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரையில் இரு பெரும்பான்;மையினக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி செய்கின்றது. இந்த நல்லாட்சியில் தமிழர்களோ அல்லது முஸ்லிம்களோ தனித்து நின்று எதையும் சாதிக்க முடியாது. எனவே அவர்களுடன் இணைந்து எமக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
'மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானப் பாவனையானது மிக அதிகமாகக் காணப்படுவதுடன், இதைக் கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

கடந்த கால தனிப்பட்ட பேதங்களை மறந்து மாவட்டத்தில் மதுபானப் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசியல் தலைமைத்துவங்கள் ஒருமித்த கருத்து வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கின்றது.
 
மதுபானப் பாவனையால் சமூகச் சீரழிவுகள் ஏற்படுகின்றன. வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமானால், மதுபானப் பாவனையால் ஏற்படும்  செலவைக் குறைக்க வேண்டும்.
 
எமக்குள்ள அரசியல் கருத்துகளில் சரி, பிழை கண்டு முரண்பாடுகளுடன் செயற்படுவதை விட்டு இந்த விடயத்தில் ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும்' என்றார்.

 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X