2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'சிறுவர்களையும் இளைஞர்களையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இந்நாட்டு சிறுவர்களையும் இளைஞர்களையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை வேண்டும் என சிறிலங்கா செட் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் தலைவர் கே.அப்துல் வாஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்களிடம் கருத்தறியும் அமர்வு, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'சிறுவர்கள், இளைஞர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து அரசாங்கம் பாதுகாக்க வேண்டுமென்பதுடன், போதைப்பொருள் வியாபாரிகளைக் கைதுசெய்து அதிகபட்சத் தண்டனை வழங்க வேண்டும்' என்றார்.

'மேலும், அரச சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி இலஞ்சம் பெறுபவர்களை கைதுசெய்து பதவி விலக்க வேண்டும். பாடசாலையில் கல்வி கற்பிக்காமல் பிரத்தியேக வகுப்புகளுக்கு  மாணவர்களை அழைத்து சுயலாபம் காணும் ஆசிரியர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பாடசாலையில் சிறு பிள்ளைகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சத்துணவுகளில் ஊழல் இடம்பெறுவதால், இதனைக் கண்டறிவதற்காக அரசாங்கம் குழுவை அமைத்து இவ்வாறான விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X