Niroshini / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் நடத்தும் 2015ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும் இளம் சைவப்புலவர் தேர்வில் மட்டக்களப்பு குறுமன்வெளி கிராமத்தைப் பிறப்பிடமாகவும் கல்லடி மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிடர் சிவனேசராசா சிவராஜா என்பவர் சைவப்புலவர் தேர்விலும் அவரது மனைவியான சிவமோகனசுந்தரி சிவராஜா இளம் சைவப்புலவர் தேர்விலும் சித்தி பெற்றுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை யாழ் கீரிமலை சிவபூமி மடாலய மண்டபத்தில் உள்ள சிவத்தமிழ் செல்வி சைவப் புலவர் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இவர்களுக்கான பட்டமளிப்பு வழங்கப்பட்டது.
இதன்போது 6 பேர் சைவப்புலவர்களாகவும் 16 பேர் இளம் சைவப் புலவர்களாகவும் பட்டமளிக்கப்பட்டனர்.
இம்முறை நடத்தப்பட்ட சைவப்புலவர் தேர்வில் சோதிடர் சிவனேசராசா சிவராஜா மாத்திரமே கிழக்கு மாகாணத்தில் இருந்து சித்திபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025