Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 07 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறானவர்களுக்கு, சிகிச்சைகளை வழங்கக் கூடிய வகையில் அனைத்து வசதிகளுடனும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, தயாராகவுள்ளதாகவும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் இப்ராலெப்பை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
டிசெம்பர் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வந்தது.
ஜனவரி மாதம் 200க்கும் அதிகமானவர்களும் பெப்ரவரி மாதம் 376 நோயாளர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தொகை இம்மாதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கின்றோம்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எவ்வளவு நோயாளர்கள் வந்தாலும் அவர்களுக்கான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், மருத்துவகூட வசதிகள் உட்பட சிகிச்சையளிக்க கூடிய அனைத்து உபகரணங்களும் தயாராகவுள்ளன.
எனினும், டெங்கை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை, பொதுசுகாதார பிரிவுடன் இணைந்து பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டும். பொதுமக்கள், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால், பெருகிவரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிகையை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.
மட்டக்கப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியிலேயே, அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இரண்டாவதாக ஏறாவூர்ப் பகுதியில் அதிகளவில் டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” என்றார்.
25 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago