Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
13ஆம் திருத்தச் சட்டத்துக்கூடாக சிறுபான்மை மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டுக்கும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்க வேண்டும் என்பதுடன் தம்மை தாமே ஆளும் வகையிலான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.
வீதிக்கு வீதி கிராமத்துக்கு கிராமம் மக்கள் குறை அறிந்து நிவர்த்திசெய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியில் மக்கள் குறை அறியும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், மண்முனைப்பற்று பிரதே செயலகம் மற்றும் பிரதேசசபை மற்றும் திவிநெகும திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டப் பின்னர் நாட்டில் மக்கள் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழவேண்டும் என்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆட்சிக்காலம் போல் அல்லாமல் வீதிக்கு வீதி சென்று கிராமம் கிராமமாக சென்று ஒவ்வொரு பொதுமகனின் பிரச்சினையையும் அரசியல்வாதிகள் தீர்க்க வேண்டும் என்றவகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றோம்.
புதிய யாப்புதிருத்தம் எனும் விடயத்தை நாங்கள் நோக்கும்போது சிறுபான்மை சமூகத்துக்கான யாப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும்.சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள்,அந்தஸ்த்தை காக்கும் வகையில் அது உருவாக்கப்படவேண்டும்.
சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் கொடுக்கப்பட்டாலும் கூட அது அந்த யாப்பின் ஊடாக ரத்துச் செய்யக்கூடிய யாப்பினை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அது மாத்திரமல்ல 13ஆம் திருத்தச் சட்டத்துக்கூடாக சிறுபான்மை மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டுக்கும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். அந்த மக்களின் ஆட்சியை அவர்களே செய்கின்ற அளவுக்கு 13ஆம் திருத்தச்சட்டத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற அதிகாரத்துக்கும் மேலதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு தற்போது உள்ள சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கு வழியேற்படுத்த வேண்டும்.
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்து மக்களின் நிலைமைகளை அறிந்து சென்றுள்ளார். மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று வந்து சென்றவர் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் நியாயமான நீதியை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோன்று, நல்லாட்சி என்று நம்புகின்ற இந்த அரசாங்கத்தின் ஊடாக பாதிப்புக்குள்ளான சிறுபான்மை மக்களின் உரிமைகள், அவர்களுக்கான நிவாரணங்கள் எந்தவித அநீதியும் இழைக்கப்படாமல் கொடுக்கப்படுவது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் சர்வதேசத்தில் இருந்து இங்கு வந்து மக்களின் பிரச்சினைகளை ஆராய்பவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படாவிட்டாலும் இந்த நல்லாட்சியில் யாரும் இங்கு வந்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்தை சேர்ந்தவர்கள் ஆராயக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை முற்றுமுழுதாக ஒரு கண்துடைப்பாக இல்லாமல், மானசீகமாக இந்த மக்களின் பிரச்சினைகள் தீர்த்துவைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago
4 hours ago