Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 17 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை பெரும்பான்மை மக்கள் புரிந்துகொள்ளாதவரை இந்த நாட்டில் நல்லாட்சி மலராது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற விடயத்தில் இன, மத, கட்சி பேதமின்றி ஒருமித்து குரல்கொடுத்ததைப் போன்று இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும் பெரும்பான்மை மற்றும் தமிழ் முஸ்லிம் தலைமைகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.
மட்டக்களப்பு உறுகாமம் சரஸ்வதி வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில் 'இந்த நாட்டிலே நல்லாட்சி நடைபெறவேண்டும் என்பதற்காக மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தோம்.
இலங்கைத் தீவிலே தமிழ் மக்கள் நீண்ட காலமாக பிரச்சினையை எதர்நோக்குகிறார்கள் என்பதை கடந்த கால ஆட்சியாளர்கள் முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கமும் உணர்ந்துகொள்ளவில்லை என்பதை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அவர்களின் நலுவல் போக்கிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
கைதிகளின் விடுதலை தொடர்பில் ஏற்பட்ட ஒற்றுமை தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும் இருக்குமானால் எமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் வெகுவிரைவில் பெற்றுகொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்கள 65 வருடங்களாக இனபிரச்சினை எதிர்நோக்குகிறார்கள் என பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொண்டு பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களை கண்டுபிடித்து முதலில் தீர்வுகான வேண்டும். இந்த நிலை ஏற்பட்டடால் நாங்கள் சிங்களவர் தமிழர் முஸ்லிம் என்ற வேறுபாடுகளை மறந்து இலங்கையர் என்ற ஒற்றுமையுடன் வாழ முடியும். இந்த சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு நல்லாட்சி அரசாங்கத்திற்கு உள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago