2025 மே 07, புதன்கிழமை

'தமிழ்ச் சிறுவர்கள் மன அழுத்தத்துடனையே வாழ்கின்றனர்'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

தமிழ்ச் சிறுவர்கள் மன அழுத்தத்துடனேயே இன்றும் வாழ்கின்றனர். தங்களின் தந்தைமார்களை மீட்டுத் தாருங்களென்ற  கோஷத்துடன் போராடும் தினமாகவே இந்த நாட்டில் சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறதென  மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பிளாந்துறை கலைமகள் பாலர் பாடசாலையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இன்று வட, கிழக்கில் பல சிறுவர்கள் தாய், தந்தையர்களை இழந்தவர்களாகவும்
தமது தந்தையர்களை தேடுகின்ற சிறுவர்களாகவும் உள்ளனர்.

சிறுவர்களையும் மாணவர்களையும் நல்வழிப்படுத்துவதில் பாடசாலை அதிபர் ஆசிரியர்களில் மட்டும் தங்கியிருக்க முடியாது. அவர்களுடன் பெற்றோர்களின் கவனமும் கண்காணிப்பும் அக்கறையும் மிகவும் இன்றியமையாதாகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X