Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இனவாதச் செயற்பாடுகளை விடுத்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தீர்க்கமான நடவடிக்கையை இந்த அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும் என கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஆணைப்பந்திப் பிரதேசத்திலுள்ள அவரது அலுவலகத்தில ஆதரவாளர்களுடன் புதன்கிழமை (07) நடைபெற்ற கூட்டத்தின்போதே, அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டு வருடங்களைக் கடக்கவுள்ள இந்த வேளையில் இதுவரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சில விடயங்களை நல்லாட்சி அரசாங்கம் செய்துள்ள நிலையிலும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இந்த ஆண்டு நிறைவுக்குள் தமிழ் மக்களின் நியாயபூர்வமான பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை வழங்குவதற்கான நம்பிக்கை ஊட்டும் சமிக்ஞையை இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago