Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தொகுதிமுறை தேர்தல் வருமாயின், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதியைக் கூட பெறமுடியாது என கிராமியப் பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு மற்றும் கல்குடாத்தொகுதிகளிலும் மட்டக்களப்புத் தொகுதியிலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே தெரிவுசெய்யப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
சமூகசேவை நிறுவனங்களுக்கு சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியில் தளபாடங்களைக் கையளிக்கும் நிகழ்வு, காத்தான்குடிப் பிரதேசத்தில் திங்கட்கிழமை (29) இரவு நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியென்றாலும், அதிலும் முஸ்லிம் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக வரமுடியாது. மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம்; வாக்குகள் வித்தியாசப்படும்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா என்ற வேறுபாடின்றி ஒற்றுமைப்பட்டால் மாத்திரமே ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரையாவது பெறமுடியும்' என்றார்.
'இனி வரப்போகின்ற கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஒன்றுபட்ட அரசியல் இம்மாகாணத்தில் நடைபெறப் போகின்றது. எவ்வாறு நாடாளுமன்றத்தில் இருக்கின்றதோ, அதேபோன்று கிழக்கு மாகாணசபையிலும் எலN;லாரும் ஒன்றுசேர்ந்து மஹிந்த அணியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரே அணியாக இருக்கும்.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் அரசியலில் பாரிய மாற்றங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான அலை திரண்டு நிற்கும். அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்;க்கப்படுகின்றது. அடுத்த மார்ச் மாதமளவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.

2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago