2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

தேசிய உற்பத்தி திறன் விருது போட்டிக்கு மட்டு.வில் 15 நிறுவனங்கள் தெரிவு

Niroshini   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

2014ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் விருது போட்டிக்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 15 அரச திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிணங்க,மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, ஏறாவூர் மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச செயலகங்களும் ஏனைய அரச திணைக்களங்களும் வைத்தியசாலைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தரம், உற்பத்தித் திறன் மற்றும் சேவையினை மேம்படுத்துவதற்காக நற் திறமைகளை பின்பற்றுவதற்காக அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஊக்கமளித்தல்,தேசிய தொலைநோக்கு மற்றும் அபிவிருத்தி செயற்திட்டத்துடன் இணங்கி தேசிய அபிவிருத்திக்கு வினைத்திறனுடன் பங்களித்து இலங்கையர்களின் வாழ்க்கை தரத்தை கூட்டும் தேசிய பணிக்கு அரச நிறுவனங்களை ஈர்த்தெடுத்தல்,

எடுத்துக்காட்டான அரச நிறுவனங்கள் மற்றும் அரச ஊழியர்களை இனம் காணல், தேசிய மட்டத்தில் மதிப்பிடுதல், அரச நிறுவனங்களை தரப்படுத்துவதால் பொதுமக்கள் நலத்துக்கு ஒரு நிறுவன அமைப்பினை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு இந்த உற்பத்தி திறன் போட்டி நடத்தப்படுகின்றது.

இந்த உற்பத்தி திறன் விருது போட்டிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களை பரிசீலிப்பதற்காக தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்த்த அதிகாரிகள் இவ்வாரம் மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விருதுக்கான போட்டி முடிவுகள் ஒக்டோபர் மாதம் வெளியிடப்படுவதுடன் தேசிய விருது விழா நவம்பர் மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .