Suganthini Ratnam / 2016 நவம்பர் 29 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
தேடலானது மாணவர்களிடம்; மாத்திரமின்றி, ஆசிரியர்களிடத்திலும் தற்போது குறைவாக உள்ளது என மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.
மாணவர்கள் வாசிப்புத்திறனை மேம்படுத்த வேண்டும் என்பதுடன், நூலகம் மற்றும் ஈ நூலகங்களில் அறிவு ரீதியான விடயங்களைத் தேடி வாசிக்க வேண்டும். தேடலை மையப்படுத்திய அறிவை வளர்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மட். பட்டிருப்பு மத்திய மகா வித்தியலய தேசிய பாடசாலைக்கும் மட். களுதாவளை மகா வித்தியாலய பாடசாலைக்கும் இடையில் திங்கட்கிழமை (28) களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற விவாதப் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'பகுதிநேர வகுப்புகள்; வந்த பின்னர் வீடுகளில் மாணவர்கள் படிப்பதற்குரிய சந்தர்ப்பம்; குறைவாகவுள்ளதுடன், சுயமாக கற்கும் மற்றும் தேடலுக்கான வாய்ப்புக் குறைவாக உள்ளது.
இந்நிலைமையை மாற்ற வேண்டும். தேடலின் முக்கியத்துவம் தொடர்பில் பெற்றோருக்கும் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago